காலையில் எழும்பொழுது எதனை முதலில் பார்க்க வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
காலையில் எழும்பொழுது நாம் உள்ளங்கையை பார்க்க வேண்டுமா அல்லது தாய் ,தந்தை, குழந்தைகள் போன்றவர்களின் முகத்தில் முழிக்க வேண்டுமா என்பதனைப் பற்றி தனித்தனி கருத்துக்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் உள்ளங்கையை பார்த்தால் அந்த தினம் முழுவதும் நன்றாக அமையும். ஒரு சிலருக்கு சாமி படங்களையோ அல்லது அவர்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்தால்தான் அந்த தினம் சிறப்பாக அமையும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வகையில் நம்முடைய உள்ளங்கையை பார்த்தால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக காலையில் எழுந்தவுடன் இரண்டு உள்ளங்கையையும் சேர்த்து பார்ப்பது தான் சிறப்பு. கைகளின் நுனியில் திருமகளும், கையின் நடுவில் கலைமகளும், அடிப்பக்கத்தில் பிரம்மாவும் இருப்பதாக ஐதீகம்.
எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையை பார்க்க வேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது அந்த தினம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. உள்ளங்கை நம் உடலில் உள்ள மற்ற பாகங்களை விட தனித்துவமாக காட்சியளிக்கும் பொதுவாக கைகள் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். அறிவியல் ரீதியாகவும் இதற்கான சில பலன்கள் உள்ளது.
இரவு முழுவதும் ஓய்வில் இருக்கும் நம் கண்கள் விழிக்கும் போது அதற்கான சக்தியை கொடுப்பதாக உள்ளங்கை இருக்கின்றது. அதனை தேய்க்கும் பொழுது கண்கள் பாதிப்படையாமல் இருக்கும்.
உள்ளங்கையை தலையில் எண்ணெய் வைக்கும் பொழுதும் அல்லது தலை குளிக்கும் பொழுது மட்டுமே வைக்க வேண்டும். அவ்வாறு மற்ற நேரங்களில் உள்ளங்கையை தலையில் வைத்தால் நாம் பெற்றுள்ள கர்மவினை பாவங்கள் பெருகும் என கூறப்படுகிறது.
குறிப்பாக சனிக்கிழமை அன்று பெண்களின் உள்ளங்கை தலையில் படக்கூடாது. பொதுவாக சூரிய உதயத்திற்கு முன்பு உள்ளங்கை தலையில் படலாம் ஆனால் சூரிய உதயத்திற்கு பின்பு நம் உள்ளங்கை தலையில் பட்டால் பெரிய தோஷம் உண்டாகும்.
அதனால் தினந்தோறும் நாம் காலையில் எழும்பொழுது உள்ளங்கையை தேய்த்து அதனை பார்த்து வந்தால் அன்றைய தினம் சிறப்பாக அமையும் மற்றும் உடல் நலமும் மேம்படும்.