Whatsapp அப்டேட்! குரூப் அட்மின்ங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கிய whatsapp நிறுவனம்!

Photo of author

By Sakthi

பிரபல சமூக வலைதள ஊடகமான whatsapp செயலியில் பல விதமான வதந்திகள் பரப்பப்படுவதால் அதனை தடுப்பதற்காக பல அப்டேட்களை அந்த நிறுவனம் செய்து வருகிறது. அந்த விதத்தில் போலி செய்தி பரப்புவதை தடுக்கும் நடவடிக்கையாக whatsapp குரூப் அட்மின்களுக்கு மற்றும் சிறப்பு அங்கீகாரத்தை அந்த நிறுவனம் தற்போது வழங்கியிருப்பதாக தெரிகிறது.

அந்த விதத்தில் வாட்ஸ் அப் பிரைவசியில் last seen,status, about, உள்ளிட்டவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்திய சூழ்நிலையில், தற்சமயம் Dp என சொல்லப்படும் வாட்ஸ் அப் display picture உள்ளிட்டவற்றை விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என்று புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதோடு புதிய whatsapp குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் உள்ளிட்டவத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கும் வசதியை வழங்கி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தற்சமயம் வாட்ஸாப்களில் போலி செய்திகளை பரப்புவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் குரூப் அட்மின்களுக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது.

அதாவது போலி செய்தி, அவதூறு, ஆபாச பேச்சு, வீடியோ வெளியிட்டவற்றை தவிர்க்கும் நோக்கத்தில் குரூப் அட்மின்களுக்கான டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரி ஒன் என்ற அம்சத்தை கொண்டு வந்திருக்கிறது. இதுவரையில் தனிப்பட்ட நபர்கள் மட்டுமே டெலிட் மெசேஜ் ஃபார் எவரி ஒன் என்ற அம்சத்தை கொண்டு வந்திருக்கிறது. விரைவில் அனைத்து அட்மின்களுக்கும் இது கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.