விரைவில் அறிமுகமாகும் கோதுமை பீர்.. உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்!!
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெயிலை சமாளிக்க பலரும் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும குறிப்பாக மதுப்பிரியர்கள் வழக்கமாக அருந்தும் விஸ்கி பிராந்தி போன்றவற்றை தவிர்த்து வெயிலை சமாளிக்கும் விதமாக ஜில்லுனு பீர் வாங்கி அருந்தி வருகிறார்கள். இதனால் பீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் தமிழக டாஸ்மாக் நிறுவனங்கள் 7 கம்பெனிகளில் இருந்து பீர் வகைகளை வாங்கி வருகிறார்கள். இதில் 2 நிறுவனங்கள் பீர் உற்பத்தியை நிறுத்தி விட்டது. ஒரு நிறுவனம் கடந்த ஆண்டு முதல் குறைவான அளவில் மட்டுமே பீரை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. எனவே தற்போது புதிதாக டிராபிக்கல் என்ற நிறுவனத்திடம் இருந்து பீர் வாங்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை 10 லட்சம் பீர் பெட்டிகள் ஸ்டாக் செய்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வழக்கமாக ஒரு பீர் 160 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோடை வெயிலை சமாளிக்க மதுப்பிரியர்களுக்கு புதிய வகை பீர் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளனர்.
அதன்படி, முழுக்க முழுக்க கோதுமையால் தயாரிக்கப்பட்ட வீட் பீர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பீரின் விலையானது 190 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பிரபல நிறுவனமான காப்டர் தயாரிப்பில் விதவிதமான பீர் வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்தும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.