மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

Photo of author

By Parthipan K

மனிதர் இறந்தால் அவர்களின் உடல் உரமாக்கப்படும்! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

அமெரிக்க மாகாணங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அண்மையில் மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.அதன் அடிப்படையில் ஒரு நபர் இறந்த பிறகு தன உடலை மண்ணாக மாற்றி கொள்ளலாம் என பதிவு செய்திருந்தால் அவர் இறந்ததுக்கு பிறகு அவரின் உடலை எரிப்பது அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் நன்மை பயக்கும் நடவடிக்கையாக இவை செயல்படுத்தப்படுகின்றது.

இந்த உரமாக்கும் முறைக்கு மனித சடலம் ஒரு கண்டெய்னரில் அடைக்கப்படும்.மேலும் பல வாரங்கள் கழித்து அந்த உடல் மக்கி போன பிறகு உரமாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை அதிகாரப்பூர்வமாக கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.மேலும் இவை முதன் முதலில்  அமெரிக்க மாநிலமாக வாஷிங்டனில் இருக்கிறது.

அதனையடுத்து கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா போன்றவை இதை பின்பற்றி வந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியது அதனை அடுத்த அந்த பட்டியலில் ஆறாவது அமெரிக்க மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.