பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர்.
இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப நிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிப்பதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் அதிக பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் இது குறித்து,அரசு மேல்நிலை பள்ளி ஒன்றின் விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்க்கு அமைச்சர் கூறியதாவது,
தற்போதுதான் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இதர மாணவர்களுக்கும் தேர்வுகள் முடியும் பட்சத்தில்,கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது வெயில் தாக்கத்தை பொறுத்து அப்போது முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.