காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு எப்போது அகவிலைப்படி?? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

0
157
When is gratuity paid to heirs of deceased employees?? Information released by Tamil Nadu Government!!
When is gratuity paid to heirs of deceased employees?? Information released by Tamil Nadu Government!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை சமீபத்தில் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து ஓய்வூதியம் இல்லாத பணி அமைப்பை சேர்ந்த காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு அதற்கென தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உத்தரவை வெளியிட்டார்.

மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்  சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பரிவர்த்தனை படி ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி தொகை வழங்கப்பட உள்ளது.

மாநில கணக்காய்வுத் தலைவரிடம் முறையான அனுமதி பெறும் வரை காத்திருக்காமல் சென்னையில் அலுவலர்கள் உடனடியாக திருத்திய அகவிலைப்படியை வழங்கலாம். இந்த அகவிலைப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இந்த அகவிலைப்படி பொருந்தும்.

ஓய்வூதியம் இல்லாத பணியலரமைப்பை சேர்ந்த பணியாளர்கள் காலமாகி இருக்கலாம், அந்த பணியாளர்களின் இனையர் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த உத்தரவுகள் தனியாக அறிவிக்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வுக்கான பட்டியலை சமர்ப்பித்தது கருவூல அலுவலர்கள், உதவி கருவூல அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்களுக்கு கருவூல கணக்கு துறை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Previous articleதமிழக அரசியல் யுத்தியை காப்பியடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!!
Next articleகமல் முன் நடனமாடிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா!! இருவரும் இணைத்த நடித்த 1 திரைப்படம்!!