பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர்!

Photo of author

By Sakthi

நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையில் மாணவர்களை தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு வ மட்டும் முடிந்திருக்கின்றன. பொது தேர்வு நடத்தப்படுவது குறித்து அரசு உறுதியாக இருப்பதால் நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உண்டானது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றுக்கொண்டார் முன்னரே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து திங்கள்கிழமை ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படியே இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது அவர் பேசியதாவது, நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

நோய் தொற்று காலம் என்ற காரணத்தால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார். அதோடு ஆலோசனையின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த பின்னர் முதல்வரின் அறிவுரையின் அடிப்படையில் தேர்வு தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.