சொத்துக்களை பொருத்தவரை எம்ஜிஆர் தன்னுடைய சொத்துக்கள் தனக்குப்பின் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முடியும் முன்பாகவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை சிவாஜி கணேசனும் அம்மையார் ஜெயலலிதாவும் கோட்டை விட்டுவிட்டதாக பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்திருக்கிறார்.
Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :-
சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு 20 பேர் வேலைக்கு வேண்டுமென்றும் அத்தனை பேருக்கும் மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்காகவே தனியே வேலை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்து அவர் சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் என்று இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து கொண்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் வீட்டுக்கு எதிரே இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை தற்பொழுது விற்று விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய சொத்துக்கள் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது என்பது போல எம்ஜிஆர் அவர்கள் உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்ததைப் போல ஜெயலலிதா அம்மையாரோ நடிகர் திலகமோ செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலால்தான் இன்று மூன்று கோடி ரூபாய்க்கு அன்னை இல்லம் வீட்டை அடகு வைப்பது என்பது நிகழ்ந்திருப்பதாகவும் அதனை தன்னால் ஜீரணம் கூட செய்து பார்க்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.