தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதை குறித்து தமிழக அரசு பெற்றோர்களிடமும், மருத்துவர்களிடமும் அடிக்கடி ஆலோசித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழிபாட்டுற்கு சென்றுள்ளார்.
அங்கு பத்திரிக்கையாளர்கள் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வியை அவரிடம் முன்னிறுத்தினர். அதற்கு அவர் கூறியதாவது,தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கும் அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆயினும் கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தின் தீவிரம் அறியாமல் பள்ளி கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் உள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி மூன்றாவது அறையின் தாக்கத்தைப் பொறுத்தே பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு தீர்ப்பளிக்கப்படும்.
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுது தேர்வு கட்டணத்தை தனியார் பள்ளிகள் தவணை முறையில் செலுத்தலாம். அதனை மூன்று பாகங்களாக பிரித்து தவணை முறையில் செலுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் கிளாஸில் மாணவர்கள் எளிதாக கல்வி கற்க இயலாவிட்டாலும், கொரோனாவிடம் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு இதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை என அவர் கூறியுள்ளார்.