DMK: புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை பணம் எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இருப்பினும் ஒரு சிலருக்கு இத்திட்டமானது செல்லுபடி ஆகாது என வரைமுறைகளை வகுத்துள்ளது. அந்த வகையில் முன்னதாகவே பென்ஷன் தொகை பெறுபவர்கள், அரசு ஊழியர்களின் மனைவிகள் எனத் தொடங்கி கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் வரை அனைவருக்கும் இத்திட்டமானது ரத்து செய்யப்பட்டது.
இதனால் பெண்கள் இந்த திட்டத்தின் மீது அதிருப்தி கொண்டனர். மேற்கொண்டு கோரிக்கையும் வைத்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் தமிழக அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கார்ப்பரேஷன் ஊழியரின் மனைவிகள், பெண்கள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தது. அதன்படி இரண்டாவது முறையாக இந்த திட்டத்தின் கீழ் 1.40 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் எப்பொழுது வழங்கப்படும் அதன் பணம் எப்பொழுது கிடைக்கும் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது, அதிவிரைவிலேயே இதற்கான விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டு இத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் இணைக்கப்படுவர் எனக் கூறியுள்ளனர்.