தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்??

Photo of author

By Rupa

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்??

Rupa

When you say Tamil Nadu, they drive you away. Udayanidhi's next action??

தமிழ்நாடு சொன்னாலே விரட்டி அடிக்கிறாங்க.. குமுறும் வீராங்கனை!! உதயநிதியின் அடுத்த ஆக்ஷ்ன்??

அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் இடையான கராத்தே போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றதையடுத்து பலரும் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக நமது தமிழகத்தில் வீராங்கனை அபிநயா பங்கேற்று சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சத்தீஸ்கர் மற்றும் வடநாட்டு போட்டியாளர்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடக்கூடாது என்று எண்ணி இவரது புள்ளிகளை திட்டமிட்டு குறைத்துள்ளனர்.

இதனை தட்டி கேட்ட வீராங்கனை அபிநயா மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவரையுமே ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் மேற்கொண்டு இவர்கள் முறையிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

எனவே எங்களுக்கு உரிய நீதி வேண்டும் எனக் கூறி வீராங்கனை அபிநயா மற்றும் அவரது பயிற்சியாளர் ராஜேந்திரன் ஆகியோர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

எங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளதால் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு எங்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் அங்கு நடந்தவற்றை தெளிவாக கூறி ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டு உள்ளதை அடுத்து தற்பொழுதுவைரலாகி வருகிறது. விளையாட்டு துறை அமைச்சர் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது பெரும்பாலானோருக்கு எதிர்பார்ப்பாக உள்ளது.தற்போது வரை இந்த வீடியோவிற்கு அரசாங்கம் சார்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.