பெண்கள் பருவம் அடைந்த பின்னர் முகத்தில் பருக்கள்,கரும் புள்ளிகள் பிரச்சனையை சந்திக்கின்றனர்.இவற்றால் முகம் பொலிவிழந்து போவதோடு அழகும் குறைகிறது.
இதை சரி செய்ய அதிக விலை கொடுத்து பேஸ் வாஷ்,க்ரீம்ஸ் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இரசாயனம் நிறைந்த பொருட்களால் சருமத்திற்கு எப்பொழுதும் ஆபத்துக்கள் தான் ஏற்படும்.இந்த கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் பாதிப்பை சரி செய்ய கல் உப்பு கலந்த நீரை முகத்திற்கு பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கப்
2)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
காலையில் எழுந்த உடன் ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு கல் உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள்.
கல் உப்பு நீரில் கரைந்ததும் இந்நீரை வைத்து முகம் கழுவுங்கள்.குளிர்ந்த நீர் அலர்ஜி என்றால் வெந்நீர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.
பிறகு காட்டன் துணி பயன்படுத்தி முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.இப்படி தினமும் காலையில் செய்து வந்தால் பருக்கள்,கரும் புள்ளிகள் அனைத்தும் நீங்கிவிடும்.இதை மாலை,இரவு நேரத்திலும் செய்யலாம்.
கல் உப்பு கலந்த நீர் முகத்தில் படுவதால் சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.முகத்தில் உள்ள அழுக்குகள்,இறந்த செல்கள்,எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் மிருதுவாகவும்,பொலிவாகவும் காட்சியளிக்கும்.
கடைகளில் விற்கும் க்ரீம்,பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவுவதை விட வீட்டில் இருக்கின்ற கல் உப்பை வைத்து சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.