எங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !..
பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி தான் பணிக்கம்பாளையம். இப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும்,அதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அந்த பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற தகவல் வந்துள்ளதாக பெருந்துறை போலீசருக்கு குறுஞ்செய்தி கிடைத்தது.
இந்த தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பணிக்கம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.அப்போது அங்கு இருவர் பயந்து போய் அச்சப்பட்டு பையுடன் பதுங்கி நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்கள் இரண்டு பேரிடமும் இருந்த கைபையை வாங்கி போலீசார் சோதனையிட்டனர்.
இச்சோதனையின்போது அந்தப் பையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா கலந்த 30 சாக்லேட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.இதைத்தொடர்ந்து இரண்டு பேரையும் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் மேற்கு வங்காள மாநிலம் பர்கானா மாவட்டம் கேட்டர்ஜாக் பகுதியைச் சேர்ந்த ராகுல் மண்டேல் இவருடைய வயது 21.
மேலும் ஒடிசா மாநிலம் ஜெலஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் பெஹ்ரா இவருடைய வயது 42. இவர்கள் இருவரும் கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை கொண்டு வந்து பணிக்கம்பாளையத்தில் விற்க முற்ப்பட்டது தெரியவந்தது.போலீசார் மேற்கொண்ட விசாரணை நடத்திகையில் சாதாரணமாக குக்கா போன்ற புகையிலை பயன்படுத்துவதற்கு சிறிது நேரம் ஓரளவு போதை மயக்கம் இருக்கும்.
ஆனால் கஞ்சா கலந்த சாக்லேட்டை சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் 12 மணி நேரத்திற்கு மேலாக அந்த போதை மயக்கம் அப்படியே இருக்கும் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதன்படி ராகுல் மண்டேல் மற்றும் சந்தோஷ்குமார் பெஹ்ரா இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து புகழைப் பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை கைப்பற்றினர்.