தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ். 

Parthipan K

Updated on:

Where is Tamil in Tamil Nadu? Dr Ramadoss.
தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? மருத்துவர் ராமதாஸ்.
பொங்குத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ( தமிழைத் தேடி) தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் செய்து வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் ஐயா ராமதாஸ் சென்னையில் இருந்து மதுரை வரை , தமிழைத்தேடி 8 நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இதில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழில் எழுதப்படாத அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மீது மை பூசி அளிக்க போவதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.உலகில் அதிகம் பேசப்படும் 13 மொழிகளில் இந்தி,ஆங்கிலம், சீனம் இருக்கிறது , ஆனால் அதில் தமிழ் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.தமிழ்நாட்டிலே தமிழ் எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து நிலைகளிலும் தமிழை வளர்க்க ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
நாம் வீடுகளில் பேசும்போது 95 சதவீதம் தாய்மொழியும், 5 சதவீதம் பிற மொழிக் கலப்பும் இருக்கலாம் , ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது.
‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என பாரதியாரிடம் நீலகண்ட சாஸ்திரி சொன்னதை விட தமிழ் வேகமாக அழிந்து கொண்டு வருகிறது என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும். கல்வி வணிகத்தில் ஈடுபடும் சங்கங்கள் தமிழை அழித்துக் கொண்டிருக்கின்றன.