அடுத்த ஆட்டத்தை தொடங்க இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! சிக்கப் போவது யார்?

0
159

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்னரே அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனேக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை தெரிவித்து வந்தது திமுக. அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர் காமராஜ், சி விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், டி ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தது உட்பட பல்வேறு ஊழல் புகார்களை முன்னிட்டு 96 பக்கங்கள் கொண்ட ஒரு குற்றப்பத்திரிகையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இடம் தாக்கல் செய்தது அப்போதைய எதிர்கட்சியான திமுக.

கடுமையான ஊழல் புகார்களுக்கு ஆளாகி இருக்கின்ற அதிமுகவின் அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்படும் என்பதை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியிலேயே இடம்பெறச் செய்தது திமுக தலைமை. இந்தநிலையில், ஆட்சி அமைந்த உடன் நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தது தமிழக அரசு. நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடு, தொழிற்சாலை மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வருமான வரி சோதனையை அரங்கேற்றியது தமிழக அரசு. அதன் பின்னரும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனை செய்தது.

தற்சமயம் ஆளும் திமுக அரசின் பார்வை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமியின் மீது திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தாமல் கொடநாடு வழக்கு என்ற இன்னொரு பக்கமாக சென்று அவரை மடக்குவதற்கு திட்டம் போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரை தொடர்ந்து அதிமுகவின் எந்த முக்கிய நிர்வாகி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்ற கேள்வி பொதுமக்கள் இடையே மட்டுமல்லாமல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இடையிலேயே பூதாகரமாக ஏழுந்திருக்கிறது. அந்த கேள்வியை முன்வைத்து இப்போது நாம் ஒரு சில யூகங்களை இங்கே காணலாம்.

அடுத்ததாக யார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெறும் என்ற கேள்வி பெரிய அளவில் எழுகிறது. முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீது தான் அடுத்த நடவடிக்கை என்று சிலர் தெரிவிக்கிறார்கள். அதற்கு முன்னுதாரணமாக அரப்போர் இயக்கம் ஒரு சில தகவல்களை பத்திரிக்கையாளர்கள் இடையே வெளியிட்டு இருக்கின்றது. மின்சாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது வட சென்னையில் இருக்கின்ற அனல் மின் நிலையத்திற்கு சென்னை துறைமுகம் மூலமாக எடுத்துச்செல்லப்படும் நிலக்கரி உள் ஒதுக்கீடு ஒதுக்கீடு என்று இரு பிரிவுகளாக சேமிக்கப்பட்டு வருகிறது. நிலக்கரி கிடங்கில் இருப்பை சரிபார்த்த சமயத்தில் பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் இடையில் சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் வித்தியாசம் இருப்பதாக தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அதன் மதிப்பு சுமார் 85 கோடி இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அதை கண்டுபிடிப்பதற்காக ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கிறது எனவும் அவர் கூறியிருக்கின்றார் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர்கள் நிச்சயமாக தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் எனவும் செந்தில்பாலாஜி உறுதிபட கூறியிருக்கிறார்.

நிலக்கரியின் மூலமாக ,நடைபெற்ற ஊழல் மற்றும் பல லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீது தான் முதலில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிகிறது. அந்தவிதத்தில் மட்டுமல்லாமல் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக மற்றும் சிம்மசொப்பனமாக இருந்தவர் என்ற விதத்திலும் ,செந்தில்பாலாஜிக்கு மிகப்பெரிய எதிரியாக கருதப்பட்ட தங்கமணி மீது தான் லஞ்ச ஒழிப்புத் துறையின் பார்வை அடுத்ததாக விழ இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அதோடு ஒரு சிலர் சட்டசபையில் நடைபெற்ற கூட்டுறவு மற்றும் உணவுத்துறை களின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து உரையாற்றிய தற்போதைய ஊரக தொழில் துறை அமைச்சர் தாமோதரன் நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளில் தாட்கோ வங்கியின் ஐந்து கிளைகளின் தங்க நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் மோசடி செய்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

Previous articleகோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!
Next articleகாபுல் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்! ஆவேசமடைந்த அமெரிக்க ஜனாதிபதி!