1954 ஆம் ஆண்டு 26 வது நாள் ஆகஸ்ட் மாதம் சிவாஜி கணேசனின் இரு படங்கள் வெளியானது. ஒன்று உலக புகழ் போற்றும் எம்ஜிஆர் அவர்களுடன் இணைந்து நடித்த படம் , மற்றொன்று ஒரு வரலாற்று திரைப்படம் இரண்டுமே ஒரே நாளில் வெளியானது.
தூக்கு தூக்கி 26 ஆகஸ்ட் 1954 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் அரசு குடும்பத்தில் மூன்று மகன்கள் இருப்பார்கள். மூன்று மகன்களையும் தந்தை வணிக ரீதியாக செல்வத்தை ஈட்டுவது தான் முறை என்று சொல்லி வணிகத்தை பெருக்குவதற்காக அனுப்பி வைப்பார். ஆனால் மூன்றாவது மகனாகிய சுந்தரங்கதன் மட்டும் ரிஷிகளை சென்று பார்க்கும் பொழுது ரிஷிகள் அவர்களின் ஞானதிஷ்டையில் சுந்தரங்கதன் 5 வாழ்வின் உண்மைகளை சொல்கிறார்கள்.
ஒரு தகப்பன் தன் மகன் சம்பாதித்த செல்வத்தில் மட்டுமே அக்கறை காட்டுகிறான்.
நல்ல மற்றும் கெட்ட காலங்களில் மகனுக்கு துணையாக இருப்பது தாய் மட்டுமே.
ஒரு சகோதரி தன் சகோதரனை அவன் கொண்டு வரும் பரிசுக்காக மட்டுமே மதிக்கிறாள்.
மனைவி தன் கணவனைக் கூட கொல்லலாம்.
தேவை ஒரு நண்பர் உண்மையில் ஒரு நண்பர் ஆகிறது.
ஒரு கட்டத்தில் இதை நம்பாத சுந்தரங்கதன் இதை உண்மையா? என்று தெரிந்து கொள்ள செல்கிறான். 5 உண்மைகளும் அப்படியே நடக்கின்றது. இதனால் மனம் உடைந்த இளவரசன் பைத்தியம் ஆகிறான். அப்பொழுது மற்றொரு நாட்டு இளவரசி இவரை காதலிக்கிறார். ஐந்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்து எப்படி மணக்கிறார் என்பதுதான் இந்தக் கதை.
இந்த படம் அருணா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் RM கிருஷ்ணசாமி இயக்கியது.
மற்றொரு படம் “கூண்டுக்கிளி” இந்த படத்தில் எம்ஜிஆர் அவர்களும் சிவாஜி அவர்களும் இணைந்து நடித்த ஒரு படம் என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் சிவாஜி ஒரு வில்லத்தனமான வேடத்தில் நடித்திருப்பார்.
இந்த படம் டி ஆர் ராமண்ணா அவர்கள் தயாரித்து இயக்கிய படம்.
இது சிவாஜி மங்களா என்ற ஒரு பெண்ணை பெண் பார்ப்பதற்காக அவர்களது வீட்டார் அழைத்துச் செல்வார்கள். அப்பொழுது மங்களாவிர்க்கு சிவாஜி தான் பெண் பார்க்க வருகிறார் என்று தெரியாது. ஒரு சில கடன் தொல்லை காரணமாக திருமணம் நடைபெறாமலேயே சென்று விடும்.
கடன் தொல்லை விரக்தியின் காரணமாக ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்வதற்காக படுத்திருப்பார் சிவாஜி. அப்பொழுது எம்.ஜி.ஆர் காப்பாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார். அப்பொழுது தான் திருமணம் செய்யவிருந்த மங்களா எம்ஜிஆரின் மனைவியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவார் சிவாஜி.
பின் தொழிற்சாலை பிரச்சனை காரணமாக எம்ஜிஆர் சிறைக்கு செல்வார். இதை சாதகமாக பயன்படுத்தி சிவாஜி மங்களாவின் மனதை மாற்ற முயற்சிப்பார். ஆனால் மங்களா இதற்கு இடம் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறுவார்.
இதற்கிடையில் எம்ஜிஆர் ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் இந்த செய்தியை கேள்விப்பட்ட சிவாஜியை அடிக்க வேண்டும் என்று கிளம்புவார். மங்களா தன்னை ஏற்காததால் மறுபடியும் தண்டவாளத்தின் தலையில் வைத்து படுத்திருப்பார்.
என் மனைவியை ஏன் தொல்லை செய்தாய் என்று இருவரும் சண்டை போடுவார்கள். அதன்பின் இந்த உண்மையை கேள்விப்பட்ட பின் சிவாஜி மனம் திருந்திவிடுவார். அதன்பின் சிவாஜியை ஒருதலையாக காதலிக்கும் சொக்கி என்ற பெண்ணுடன் எம்ஜிஆர் திருமணம் செய்து வைத்து படம் மகிழ்ச்சியாக முடியும்.
தூக்கு தூக்கி கூண்டுக்கிளி இந்த இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானது. வணிக ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது “தூக்குத் தூக்கி” படமே.
ஏனெனில் கூண்டுக்கிளி படம் வெளிவந்த பொழுத தியேட்டர்களில் இரு தரப்பினருக்கிடையே அதாவது சிவாஜி மற்றும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு இடையே மாபெரும் சண்டை கிளம்பியது. அந்த சண்டையை சமாளிக்க முடியாமல் தியேட்டர்களில் படம் போடுவது நிறுத்தப்பட்டது. அதனால் வணிக ரீதியாக படம் பாதிக்கப்பட்டது.