இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..

0
233

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..

 

மேஷ ராசி அன்பர்களே..இந்த வாரம் பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும் ஞாயிறுதோறும் சூரிய பகவானை வழிபட எண்ணங்கள் ஈடேறும்.

ரிஷப ராசி அன்பர்களே..இந்த வாரம் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சூடு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும், வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட தடைகள் விலகும்.

 

மிதுன ராசி அன்பர்களே…இந்த வாரம் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுணுக்கங்களை கையாளுவீர்கள்.வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மையான சூழ்நிலைகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.இந்த தெய்வத்தை மட்டும் வழிபட்டால் போதும் புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபாடு செய்து வர ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

 

 

Previous articleKanavu Palangal in Tamil : கனவு பலன்கள்
Next articleநரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்! இதை மட்டும் செய்தால் போதுமானது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here