WHITE HAIR பிரச்சனை? 2 நிமிடத்தில் முடி கருகருன்னு மாற.. ஹோம் மேட் ஹேர் டை போதும்!!

0
120

கடந்த காலங்களில் ஒருசில இளம் வயதினருக்கு மட்டுமே இளநரை பிரச்சனை இருந்தது.ஆனால் தற்பொழுது இது சாதாரண ஒரு பாதிப்பாக மாறிவிட்டது.பள்ளி பருவ குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை அனைவருக்கும் வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கிவிட்டது,

வெள்ளை முடி வரக் காரணங்கள்:-

*மன அழுத்தம்
*ஊட்டச்சத்து குறைபாடு
*கெமிக்கல் ஷாம்பு பயன்பாடு
*தலைமுடி பராமரிப்பின்மை
*பித்தம் அதிகரிப்பு

வெள்ளை முடியை அடர் கருமையாக்கும் ஹோம் மேட் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

1)செம்பருத்தி இதழ்
2)பீட்ரூட்
3)கறிவேப்பிலை
4)வெந்தயம்
5)டீத் தூள்
6)கருஞ்சீரகம்
7)கடுகு

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கைப்பிடி செம்பருத்தி பூ எடுத்து அதன் காம்பை நீக்கிவிட்டு இதழ்களை சேகரித்துக் கொள்ளவும்.

பிறகு இதை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பிறகு ஒரு சிறிய சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து சீவி வைத்துள்ள பீட்ரூட் மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி கடுகு,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம்,ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி டீத் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி உலர்ந்த கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.அடுத்து கொதித்து கொண்டிருக்கும் பீட்ரூட் கலவையை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி நன்கு ஆறவிட்டு அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கலந்து கட்டி சேராமல் கிளறிவிடவும்.

பிறகு அதில் ஒரு எலுமிச்சம் பழ சாறை பிழிந்து இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிட்டால் ஹேர் டை தயாராகிவிடும்.இதை தலைக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிக்கவும்.

இந்த ஹேர் டையை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தும் போதே நல்ல ரிசல்ட் கிடைத்துவிடும்.

Previous articleபடிப்பில் டாப்பாராக.. மன அழுத்தம் குறைய தினமும் 2 நிமிடம் “மாதங்கி முத்திரை” செய்யுங்கள்!!
Next articleஎது சாப்பிட்டாலும் வயிறு அலசுதா? இந்த பூவை தயிரில் கலந்து சாப்பிடுங்க.. தீர்வு கிடைக்கும்!!