ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தான் அமெரிக்கர்கள் மீட்பு! வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!

Sakthi

ஆப்கானிஸ்தான் தாலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்க அரசுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் வாழ் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க மக்களும் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு செய்து வருகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் காபூல் நகரில் இருந்து சென்ற 12 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.