டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி!!

Photo of author

By Savitha

டெல்லியில் உள்ள உயிரியியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறைகளுக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மத்திய அமைச்சர் கொடியசைத்து வைத்து, வெள்ளையின புலி குட்டிகளை அதற்கான நிலப்பகுதிகளில் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது.

தற்போது, இந்த உயிரியியல் பூங்காவில் 5 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 9 புலிகள் உள்ளன.

தாய் புலி சீதா மற்றும் அவற்றுடன் 2 புலி குட்டிகள் திறந்து விடப்பட்டு உள்ளன. அவை கோடை வெப்பம் தணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.