கிராமத்து காதலையும் கிராமத்து மண் வாசனையையும் அழகாக தன் படங்களின் மூலம் வெளிப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய படங்களுக்கு இன்றளவும் தனி ரசிகர் படை இருந்து தான் வருகிறது. இப்படிப்பட்ட புகழ்மிக்க பாரதிராஜா அவர்கள் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக என்ன பணி செய்து கொண்டிருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா ??? கேட்டால் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவீர்கள்.
சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெரிய மாயத்தேவர் மீனாட்சி அம்மாள் என்கின்ற கருத்தம்மாள் இருவருக்கும் மகனாக 1941 இல் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தவர் தன்னுடைய படத்திற்கு கருத்தம்மா என்ற பெயர் வைத்து அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்.
சினிமா துறையில் நுழைவதற்கு முன்பாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள் “சுகாதார துறையில்” பணியாற்றி இருக்கிறார். தீராத சினிமா மோகத்தால் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதிலும் குறிப்பாக கன்னட இயக்குனர் ஒருவருக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்து அவரிடம் இருந்து நுணுக்கங்களை கற்று தேர்ந்து தமிழ் சினிமா துறையில் சிறந்த இயக்குனராக மாறத் தொடங்கி தற்பொழுது அனைவரின் மனதிலும் மண்வாசனை விதைத்த மனிதராக பாரதிராஜா அவர்கள் விளங்குகிறார்.