தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Photo of author

By Sakthi

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துளிர்விடத் தொடங்கியது அன்றில் இருந்து இன்று வரையில் இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் பரவி தான் வருகின்றது.இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு ஆனது தற்போது வரையில் நீடித்து வருகின்றது.இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு என்ற ஒரு விஷயத்தை முதன் முதலில் அறிவித்தது இந்தியா மட்டும்தான். ஆகவே இந்தியாவைப் பார்த்து தான் மற்ற நாடுகள் இந்த ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

தொடக்கத்தில் இந்த நோய் தொடர்பாக வழக்கு எதிராக எந்த மருந்தும் இல்லாத காரணத்தால், ஊரடங்கு ஒன்றுதான் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி என்று தீர்மானம் செய்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவுகளை மிகக் கடுமையாக அமல் படுத்தி இருந்தது.ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இந்தியாவிலேயே இதற்கென்று பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு வாங்கி அதை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்தது. அதோடு இந்தியா முழுவதும் இலவசமாக தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற அறிவிப்பை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டு நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்தியாவில் 75.10 கோடி நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட தற்காக உலக சுகாதார அமைப்பு பாராட்டு கூறியிருக்கிறது.

நோய்த்தொற்று காரணமாக, அனைத்து உலக நாடுகளும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர் கொண்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து நாடுகளிலும் நோய் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதே போல இந்தியாவிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக ஒவ்வொரு வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தற்சமயம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தன்னுடைய வலைப்பக்கத்தில் பிரதமர் மோடியின் அனைவருடன் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக என்ற கொள்கையின் அடிப்படையில் உலகிலேயே இந்தியா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. தடுப்பூசித் திட்டத்தில் புதிய பரிமாணங்களை நாம் அடைந்து இருக்கின்றோம். நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் சூழ்நிலையில் 75 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என கூறியிருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் மருத்துவ பூனம் தெரிவிக்கும்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா மிக வேகமாக செயல்பட்டு வருகின்றது. 85 தினங்களில் 10 கோடி தடுப்பூசிகளை இந்தியா பொதுமக்களுக்கு செலுத்தியது. தற்சமயம் 13 நாட்களில் இந்த தடுப்பு சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 65 கோடி இல் இருந்து 75 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

இந்தியாவிற்கு பாராட்டுக்கள் என்று கூறியிருக்கிறார்.மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இது ஒரு மிகப்பெரிய சாதனை இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த சுகாதார ஊழியர்கள் மற்றும் மாநில அரசுகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார்.தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மிகப்பெரிய தடுப்பூசி முகாம் மூலமாக கடந்த 12ஆம் தேதி ஒரே நாளில் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்