சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
140

சென்ற 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும், குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, காலால் வரிக்குறைப்பின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநில அரசுகளும் வரி குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

அதோடு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒரு வருடத்திற்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா முழுவதும் சுமார் 30 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இந்த மானியம் கிடைக்க போவதில்லை.

அதற்கு மாறாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1.20 கோடி பேருக்கு இந்த மானியம் வழங்கப்பட இருக்கின்ற சூழ்நிலையில், மற்றவர்களுக்கு எந்த மானியமும் வழங்கவில்லை.

அதோடு ஒரு வருடத்திற்கு அவர்கள் பெரும் 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படுவதாகவும், அதற்கு மேல் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் கிடையாது என்றும், தெரியவந்திருக்கிறது. இந்த மானியத் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

மத்திய அரசு தற்சமயம் அறிவித்திருக்கின்ற இந்த மானிய தொகையை நடுத்தர குடும்ப மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

Previous articleயோவ் விழுந்தா விழுந்துரும்யா! கீழே விழுந்த விக்கால் கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
Next articleஅடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தப் பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!