யாருக்கு என்ன துறை ? மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு

Photo of author

By Janani

யாருக்கு என்ன துறை ? மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் யார் யாருக்கு என்னென்ன இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது என விவரங்கள் வெளிவந்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை – கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:

ராஜ்நாத் சிங் – பாதுகாப்பு
அமித்ஷா – உள்துறை
ஜே.பி.நட்டா – சுகாதாரம், ரசாயனங்கள்
சிவ்ராஜ் சிங் சவுஹான் – வேளாண், ஊரக வளர்ச்சி
மனோகர் லால் கட்டார் – மின்சாரம், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் – நிதி
ஜெய்ஷங்கர் – வெளியுறவு
அஷ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி

மன்சுக் மாண்ட்வியா – தொழிலாளர் நலன், இளைஞர் நலன், விளையாட்டு
ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
ஜித்தன் ராம் மஞ்சி – சிறு குறு நடுத்தர தொழில்கள்
தர்மேந்திர பிரதான் – கல்வி
குமாரசாமி – இரும்பு, கனரக தொழில்கள்
ராம்மோகன் ராயுடு – விமான போக்குவரத்து
பியூஷ் கோயல் – வணிகம் மற்றும் தொழில்துறை
ராஜீவ் ரஞ்சன் சிங் – பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்
சர்பானந்த சோனோவால் – கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிகள்

வீரேந்திர குமார் – சமூக நீதி
அன்னபூர்ண தேவி – மகளிர், குழந்தைகள் மேம்பாடுகிரண் ரிஜிஜு – நாடாளுமன்ற
விவகாரங்கள், சிறுபான்மையினர் நலன்
சி.ஆர்.பாட்டீல் – ஜல் சக்தி
ப்ரகலாத் ஜோஷி – நுகர்வோர் நலன், உணவு மற்றும பொதுவிநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
கிரிராஜ் சிங் – ஜவுளி
ஜூவல் ஓரம் – பழங்குடியினர் நல விவகாரம்

ஜோதிர்த்தியா சிந்தியா –
கம்யூனிகேஷன், வடகிழக்கு நலன்
பூபேந்தர் யாதவ் – சுற்றுச்சூழல், வனம்
கஜேந்திர சிங் ஷெகாவத் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கங்கள்
சிராஜ் பஸ்வான் – உணவு பதப்படுத்தும் தொழில்கள்