’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

0
150

’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்

மாமன்னன் என்ற படத்தை இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி சேலம் மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டைட்டில் ரோலான மாமன்னன் வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.  வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல முக்கியமான எதிர்க்கட்சி தலைவர் வேடத்தில் அழகம் பெருமாள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாக ஃபஹத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.