யார் சொல்வது உண்மை? பறிபோன பிஞ்சு குழந்தைகளின் உயிர்? கடலூர் ரயில் கோர விபத்து சம்பவம்!

0
43

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகில் ரயில்வே கேட் உள்ளது. தினமும் 7 மணிமுதல் 7.30 மணிக்குள் சிதம்பரம் நோக்கி ரயில் செல்லும். அந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆனால் 8.7.2025 அன்று ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்திருந்ததால் ரயில் இன்னும் வரவில்லை என்று நினைத்து நிறைய பேர் ரயில்வே கேட் வழியாக பயணிக்க ஆரம்பித்தனர்.

 

அப்போது அந்த பக்கம் வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயற்சித்துள்ளது. எதிர்பாராத விதமாக சிதம்பரம் நோக்கி வந்த ரயில் பள்ளி வாகனத்தை மோதி சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச்செல்லப்பட்டு பள்ளி வாகனம் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. தனியார் பள்ளி வாகனத்தின் உள்ளே 4 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர்.

 

பள்ளி வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தம்பி உட்பட மூன்று பேர் இறந்துவிட்டனர். வேன் ஓட்டுநர் மற்றும் இன்னொரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா ரயில் வருவதற்கு முன்னர் கேட்டை மூடுவதற்கு முயற்சி செய்ததாகவும், ஆனால் அந்த வழியாக பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகள் கொஞ்ச நேரம் திறந்து வைங்க, நாங்க அந்த பக்கம் போய்கிறோம் என்று சொன்னதால் கேட் கீப்பர் கேட்டை திறந்துவிட்டுள்ளார்.

 

பள்ளி வாகனம் வந்தபோது கேட் கீப்பர் கேட் டைமூட முயற்சித்துள்ளார். ஆனால் டிரைவர் பங்கஜ் ஷர்மாவை வற்புறுத்தியதால் கேட் திறந்ததாக பங்கஜ் சர்மா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் ரயில் வந்ததால் ரயிலில் வாகனம் மோதி இந்த கோர விபத்து நடந்துள்ளது.

 

ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும் கேட் மூடவே இல்லை எனவும், கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லவே இல்லை என்றும், கேட் திறந்திருந்ததால் தான் பள்ளி வேன் அந்த வழியில் சென்றதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல ரயிலில் இருந்து எந்தவிதமான ஹாரன் சத்தம் வராததால் ரயில் வந்ததே தெரியவில்லை எனவும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மாணவரும், டிரைவரும் பேட்டி கொடுத்துள்ளனர்.

 

இரவு நேரங்களில் நிறைய முறை கேட் கீப்பர் மது அருந்திவிட்டு கேட்டை மூடிவிடுவார் என்றும், இன்றும் அவர் மது போதையில் தூங்கி இருக்க வாய்ப்புகள் இருக்கு என்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் பங்கஜ் ஷர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleOTP கேட்டு பொதுமக்களை மிரட்டும் திமுகவினர்! சட்டப்படி இது குற்றமா?
Next articleகண்துடைப்புக்காக கொடுப்பதை போல கொடுத்து ஏமாற்றிய அரசாங்கம்!  கொதித்தெழுந்த அஜித்குமாரின் சகோதரர்!