தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்?

Photo of author

By Rupa

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்?

Rupa

Who is the clown Cook in the film 'Tala Commander'?

தல தளபதி படத்தில் கலக்கவுள்ள குக் வித் கோமாளி யார்?

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வசூல் வேட்டையை அள்ளித் தந்தது.இதனையடுத்து அமேசான் பிரைமில் வெளியான இப்படம் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.

இதில் அனிருத் இசையும் ,விஜய்யின் நடிப்பும் விஜய் சேதுபதியின் வில்லத்தனமும் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.இதனையடுத்து தளபதியின் 65 படம் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.இதில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்கயுள்ளார்.

இப்போது கோலிவுட்டில் பரவி வருவது என்னவென்றால் விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருக்கிறது.இதில் பங்கேற்கும் புகழ் என்பவர் குறைந்த கால கட்டத்தில் அதிக ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி புகழ் இப்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 ல் நடிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.இவர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.இதுமட்டுமல்லாமல் ஹரி இயக்கும் அருண் விஜய் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

தல தளபதி படத்தில் நடிக்கயிருக்கும் புகழ் மேலும் சந்தானம் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.தல தளபதி படத்தில் நடிக்கும் காமிநேஷனை பார்ப்பதற்கு புகழ் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.