முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி

Photo of author

By CineDesk

முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி

கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இருதரப்பினரும் தேவைப்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம் என்றுதான் கூறி இருக்கின்றார்களே தவிர, இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று உறுதியாக இருவருமே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைவார்களா? என்ற சந்தேகத்திற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், இணைந்தால் இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் எந்த என்ற சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது. நேற்று நடிகை ஸ்ரீப்ரியா, கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கோவாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்று விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு நான் அரசியல் கட்சியை ஆரம்பித்த உடன் அது குறித்து எனது கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து இப்போது எந்த கருத்தையும் சொல்ல தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்

மேலும் 2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு கிடைத்த இந்த விருது தமிழக மக்கள்தான் காரணம் என்றும் இந்த விருதை அவர்களுக்கு நான் சமர்ப்பிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்