சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?

0
120
Who is the cute Vijay TV serial heroine as a child?
Who is the cute Vijay TV serial heroine as a child?

சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நாயகி!! யார் என்று தெரியுமா?

சின்னத்திரை சீரியல் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழை தான் முதலில் கூற வேண்டும். இந்த 3 தொலைக்காட்சிகளில்  மட்டும் தான் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதிலும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.

தற்போது விஜய் தொலைகாட்சியின் சூப்பர் ஹிட் சீரியல் தொடரின் நடிகை. இந்த நடிகை வேறு யாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் ‘கோபி-பாக்கியாவின் மகளாக நடிக்கும் ‘இனியா என்கிற நேஹா’ தான் இவர். தற்போது வயது 19. கேரளா மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்ட இவர் வளர்ந்தது சென்னை.

தற்போது கல்லூரி படித்து வரும் இவர் தமிழ் சின்னத்திரையில் பைரவி என்ற சீரியலின் மூலம் தான் அறிமுகமானவர். மேலும் பிள்ளைநிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி தொடரில் நடித்தார். மேலும் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி தொடர்தான். கடந்த 2013 ஆம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி பெரும்பாலான இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற தொடர் வாணி ராணி.

இதில் ராதிகாவின் கடைசி மகளாக அதி புத்திசாலி மகளாக நடித்திருப்பார். இவரின் துரு துரு பேச்சு, நடிப்பு ராதிகாவுக்கு இடையில் வரும் சீன்களாக அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். இந்த சீரியலுக்கு பிறகு இனியா,  பெரும்பாலான ரசிகர்களால் ‘தேனு என்றே அழைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது இத்தொடர்.

சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ளார்.  ‘தி எல்லோ பெஸ்டிவல்’ என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த குறும்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.  2016ம் ஆண்டு இவர் நாரதன் என்ற படத்தில் நடித்தார். சின்ன குழந்தையாக இருந்தவர் வளர்ந்து சற்று குண்டாகவும் இருந்தார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வருகிறார்.

author avatar
Parthipan K