செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்?

0
189

செல்வம் என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது யார்?

சகல விதமான செல்வ கடாட்சங்களையும் தருபவள் மகாலட்சுமி. அதேபோல் செல்வ வளம் வருவதை குபேர யோகம் என்று சொல்வார்கள். லட்சுமி கடாட்சம் தரும் லட்சுமி குபேரர் வழிபாடு மிக மிக முக்கியமான ஒன்றாகும். குபேரரை வழிபட்டால் நம் வாழ்வில் செல்வம் செழிக்கும். குபேரர் சிலைகளோ அல்லது புகைப்படத்தையோ நாம் தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் யோகம் திட்டும்.

லட்சுமி குபேரர் வழிபாட்டை நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீட்டில் இதுவரை இருந்து வரும் செய்வினைகளில் இருந்தும் மீளலாம்.இதற்காக பூஜை செய்யும் முறை கீழே பின்வருமாறு கூறப்பட்டுள்ளது!

இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.

அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்ய வேண்டும். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் கூட செய்யலாம்.

வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் குலதெய்வத்தை மனதார பிராத்தனை செய்து தீபம் ஏற்ற வேண்டும்.எதை செய்தாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பிறகு தான் பிற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது நமக்கு தெரிந்தது ஒன்றுதானே!!

இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், வளம் பெருகும் சந்தோஷமும் நிலைக்கும்.

Previous articleஇத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா?
Next articleமிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!