ஒடிசாவின் புதிய முதல்வர் யார்? இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சி
முடிவடைந்துள்ளது.ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருபவர் நவீன் பட்நாயக். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் மூலம் போட்டியிட்டு கடந்த ஐந்து சட்டசபை தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று ஒடிசாவில் அசைக்க முடியாத முதல்வராக நீடித்து வருகிறார்.
இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவில் மொத்தம் 147 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஆட்சியைப் பிடிக்க 74 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். அதன் படி பாஜக இந்த தேர்தலில் 78 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் ஜெயித்தது. காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், சுயேட்சை மூன்று இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வென்றது. இதன் மூலம் அங்கு 24 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில முதல்வர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் பாஜக தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. இங்கு மாநில
முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஒடிசாவின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி இன்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முதல் நபர் கேபி சிங் டியோ. இவர் 6 முறை எம்எல்ஏவாக தேர்வாகி உள்ளார்.
பாட்னாவின் அரசு குடுமப்த்தை சேர்ந்தவர். இரண்டாவதாக மோகன் மாஹி என்பவரின் பெயரும் முன்னிலையில் இருக்கிறது. ஒடிசாவின் பழங்குடியின மக்களின் வாய்ஸாக இவர் பார்க்கப்படுகிறார். இவர் 4வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்ததாக ராபி நராயணன் நாயக் பெயரும் உள்ளது. இவர் 4வது
முறையாக எம்எல்ஏவாக உள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்தவர். மேலும் சுராமா பாதி என்பவரின் பெயரும் முதல்வருக்கான பட்டியலில் உள்ளது. பாஜகவில் 2வது முறையாக எம்எல்ஏவாகி உள்ளார். இவர்கள் தவிர முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆடிட்டர் ஜெனரல் கிரிஷ் சந்திர முர்முவின் பெயர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறது.
ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெட்னோடி கிராமத்தை சேர்ந்த இவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.