இனி இலங்கைக்கு பதிலடி கொடுக்க வரும் புதிய அதிபர் யார் !! நாடாளுமன்ற கூட்டம் கூடுமா??
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் செய்தார்கள். கற்களை எடுத்து அவரின் மாளிகையில் எறிந்தார்கள். அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் கண்ணாடிகள் தூள் தூளாக நொறுக்கப்பட்டது.
போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா முன்கூட்டியே தனது குடும்பத்துடன் வீட்டிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இந்நிலையில் கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.இதைதொடர்ந்து விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் பரவியது.
மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு வலுப்பெற்று இருந்ததால் நேற்று முன்தினம் அவர் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். அத்துடன் அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முறைப்படி பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமையில் இன்று கூட்டம் கூடுகிறது. அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட காரணமாக அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இடைக்கால அதிபராக தனது முதல் பணி 19-வது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது தான் என்னுடைய முதல் குறிக்கோள் என்றும் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.இதனைத்தொடர்ந்துஇலங்கையில் பொருளாதார நெருக்கடி மிகக் கொடூரமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் எரிபொருள் பற்றாக்குறையும் கடுமையாக நீடித்து வருகிறது.மேலும் 18 ஆம் தேதி மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகள் 20 ஆம் தேதி வரை மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.மேற்கூறிய அனைத்து பாதிப்பையும் கருத்தில் கொண்டு இன்று நாடாளுமன்றம் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.