யார் அந்த பாண்டிய மன்னன் ? மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Photo of author

By Rupa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்  மாநில மாநாடு விக்கிரவாண்டி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தவெக கட்சி தலைவர் விஜய் அவர்கள், கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், அரசியல் எதிர், கொள்கை எதிரி, கட்சியின் அரசியல் பாதை என்ன என்று பல கேள்விகளுக்கு  பதிலகிக்கும் விதமாக தெளிவான உரையை  பல லட்ச தொண்டர்கள் மத்தியில் மேடையில் பேசினார்.

நடிகர் விஜய் திரைப்பட இசை வெளியீடு விழாவில்  மேடையில்  பேசும் பொது தான் சொல்ல வந்த கருத்துக்களை குட்டி  கதைகளை  மூலம்  சொல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தவெக மாநாட்டிலும் சங்க இலக்கியத்தில்  உள்ள சிறுவயது பாண்டிய மன்னன் பற்றி குட்டி கதையை கூறினார். இந்த பாண்டிய மன்னன் பற்றி பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. சங்க இலக்கியத்தின் படி தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்,  இவரை தான் தவெக தலைவர் விஜய் கூறினார்.

அந்த மன்னன் சிறுவயதில் தனது தந்தையை இழந்தால் மன்னராக ஆட்சி பொறுப்பை ஏற்றார். இவரை எளிதில் வென்றுவிடலாம் என்று நினைத்து சேர ,சோழ மன்னர்கள் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் மீது போர் தொடுத்தனர். ஆனால் இப் போரில் சிறுவயது பாண்டிய மன்னனே வென்றன். இச் செய்தியை புறபுறநானூறு  கூறுகிறது