சூர்யா கார்த்திக் இணைந்த படத்தில் யார் வில்லன்? யார் ஹீரோ?

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகுமாரின் இரண்டு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் ஆவார்.

நிஜத்தில் அண்ணன் தம்பியாக இருக்கும் இவர்கள் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை.

இந்நிலையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் இயக்குனர் லிங்குசாமி சூர்யாவிடம் சுவாரசியமான கேள்வி ஒன்றைக் கேட்க அதற்கு அரங்கமே அதிரும் வகையில் சூர்யா அதிரடி பதில் அளித்துள்ளார்.

அவ்விழாவில் இயக்குனர் லிங்குசாமி பல கேள்விகளை சூர்யாவிடம் கேட்க அதில் ஒன்றாக, நீங்களும் கார்த்தியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால் யார் வில்லன்? யார் ஹீரோ? எனக் கேட்தற்கு, சூர்யா.. வீட்டில் நான்தான் சைலன்டானா வில்லன், கார்த்தி ரொம்ப நல்ல பையன் அப்பாவுக்கு செல்ல பையன். 

எனவே படத்திலாவது தான் ஒரு சைலன்டான வில்லனாகவும், கார்த்தி  ரொம்ப நல்ல பையனா இருக்கணும். இப்படி ஒரு படம் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. மக்கள் மத்தியில் ஒரு இமேஜை மாற்ற ஆசை.

கார்த்தியும் தானும் இணைந்து நடிக்க முற்பட்டால் அந்த திரைப்படத்தில் தான் ஒரு வில்லனாகவும், கார்த்தி ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் அறியுமாறு சூர்யா தெறிக்கவிட்டார்.

இதைக் கேட்ட அரங்கமே  அதிரும் அளவுக்கு கைதட்டல் எழும்பியது. எனவே தமிழ் ரசிகர்கள் பலரும் இந்த சூப்பர் காம்போவை விரைவில் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.