தனிஒருவன்2 படத்தின் வில்லன் கதாபாத்திரம் யாருக்கு? குழப்பத்தில் படக்குழுவினர்

0
158

தனி ஒருவன்  பகுதி ஒன்றில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், அரவிந்த்சாமி வில்லனாகவும்  இயக்குனர்  ராஜா  இயக்கத்தில் வெளிவந்த மெகா ஹிட்  திரைப்படம்.  தனி ஒருவன் பகுதி-2 எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்திருந்தது 

தற்போது தனி ஒருவன் பகுதி இரண்டில் வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  தனி ஒருவன் முதல் பாகத்தில் வில்லன் அரவிந்த்சாமி கதாபாத்திரம் கிளைமாக்ஸில் இறந்து விடுவார்.  அதனால் தனி ஒருவன் பகுதி இரண்டில் அரவிந்த்சாமி மீண்டும் வில்லன் கதாபாத்திரம் செய்வாரா மாட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

தனி ஒருவன் பகுதி இரண்டில் வில்லனாக  நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாமா என்றும் இவர் தனி ஒருவன் பகுதி-2 வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒத்து வருவாரா என்றும்  இயக்குனர்  ராஜா மற்றும் படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். 

ஒரு வேலை தனி ஒருவன் 2 திரைப்படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியும் பொருந்தவில்லை என்றால் மலையாள நடிகர் மம்முட்டியை தேர்வு செய்யலாமா என்பது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous articleமருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
Next articleதிடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!