அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?? வெளியானது திடுக்கிடும் தகவல்!!

Photo of author

By CineDesk

அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?? வெளியானது திடுக்கிடும் தகவல்!!

அதர்வா  தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு முதலலில்  பாணா காத்தாடி என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.  பின்பு முப்பொழுதும் உன் கற்பனைகள் பரதேசி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகன் ஆவார்..

2013 ஆம் ஆண்டு இவருக்கு மிகப்பெரிய படமாக  பாலா இயக்கிய  பரதேசி திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார். அதை தொடர்ந்து இரும்புக் குதிரை, சண்டி வீரன், கணிதன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சண்டி வீரன் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி உடன் இணைந்து  இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 1௦ ஆண்டுகளில் 18 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் 8 க்கும் மேலான விருதுகளை வென்றுள்ளார். அதிலும் 6 விருது இவரின் பரதேசி படத்திற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இயக்குனர் சற்குணம் உடன் இணைந்து தற்போது ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதில் ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. மேலும் இந்த படத்தின் பூஜை செய்யப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது.