தலைவரின் 169 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா!! சொன்னா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!!

Photo of author

By CineDesk

தலைவரின் 169 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா!! சொன்னா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!!

தமிழ் சினிமாவில் தற்போது பெருமளவில் எதிர்பார்த்து வரும் படம் அண்ணாத்த திரைப்படம். இப்படத்தை சிவா இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது என்று நினைத்த பின்புதான் எடிட்டிங் பணியில் போது தெரியவந்தது இப்படத்தை பாதி காட்சிகள் இன்னும் படமாக்கப் படவில்லை என்ற தகவல். மேலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை ஏற்பட்டபோது ரஜினி அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அதனால் அவரது மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி அவர்கள் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த  நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு தான் வீடு வந்து சேர்ந்தார். மேலும் அண்ணாத்த திரைப்படத்தின் பாதி காட்சிகள் நிறைவேறாத நிலையில் கொல்கத்தா செல்ல உள்ளனர். மேலும் இந்த படப்பிடிப்புக்காக இன்று அண்ணாத்த திரைப்படத்தின் படக்குழு கொல்கத்தா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் தலைவரின் 169 திரைப்படத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட புகழ் தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர் சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் நடித்தனர். இந்த படம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது தலைவர் 169 திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார் என தகவல் கசிந்துள்ளது. மேலும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்து ரஜினி அவர்கள் இயக்குனரிடம் படம் நன்றாக  உள்ளது என்று கூறியுள்ளார். மேலும்  கதை ஏதேனும் இருந்தால் கூறுங்கள் நான் நடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறிய கதை ரஜினி அவர்களுக்கு மிகவும் பிடித்ததால் 169 வது படத்தை தேசிங்கு ராஜா தான் இயக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் ரஜினி அவர்கள் 170 படத்தில் திரையுலகில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிட தக்கது. இந்த  நிலையில்  தலைவரின் 170வது படத்தை யாரேனும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம். அந்த வகையில் ரஜினியின் 170 வது படத்தை அவரின் மருமகன் நடிகர் தனுஷ் கூட இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.