பிக் பாஸ் சீசன் 4 கன்டஸ்டன்ட்ஸ் யார் யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

தமிழில்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து மூன்று சீசன்களையும்  கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஜூன் ஜூலை மாதத்தில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இம்முறை கொரோனா தொற்று பரவ காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்ற  நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.  

இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் முதல் இன்னிங்சை தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் நவம்பர் என மூன்று மாதங்களில் பிக் பாஸ் சீசன் போர் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி நிர்வாகம்  முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நிலையில் தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று பின்பு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

எனவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை குறித்த செய்திகள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது. அதில் நடிகை சுனைனா,  அதுல்யா, நடிகை கிரண், குக் வித் கோமாளி புகழ், ரம்யா பாண்டியன், வித்யூலேகா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இன்னும் உறுதி இல்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த முறை கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் தொடங்கியுள்ளது.