மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல்

0
291

மாஸ்டர் படத்தை லீக் செய்தது யார்? வெளியானது தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெகு நாட்களுக்கு பிறகு நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் எதுவும் செயல்பட அனுமதிக்கவில்லை.இதனால் சில திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.இதில் பிரபல நடிகரான சூர்யாவின் சூரரை போற்று படமும் அடங்கும்.

இதனையடுத்து நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படமும் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என அவ்வப்போது வதந்திகள் பரவின.அதற்கு படக்குழுவும் முறையான மறுப்பை தெரிவித்து வந்தது.குறிப்பாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என தெளிவாக அறிவித்தனர்.

இந்நிலையில் தான் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியானது.இதனால் 50 சதவீத இறுக்கைகளுடன் இயங்கி வந்த திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழக அரசும் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில் தான் படம் வெளியாக ஒரு சில நாட்களே இருக்க மாஸ்டர் திரைப்படத்தின் அறிமுக காட்சி லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இதை யார் செய்தது என விசாரிக்க ஆரம்பித்தனர்.அந்த வகையில் இந்த காட்சியை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தான் என்று கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தபட்ட அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleபாமகவின் வாக்குகளை குறி வைத்து நகரும் திமுக! முக்கிய நபர்களை களமிறக்க முடிவு
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய பொருட் சேர்க்கை உண்டாகும் ! இன்றைய ராசி பலன் 13-01-2021 Today Rasi Palan 13-01-2021