நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

Photo of author

By Savitha

நடிகையின் தற்கொலையில் சமந்தப்படும் கதாநாயகன்!! கண்டுகொள்ளாத போலீஸ்!!

வெளியான புதிய சிசிடிவி காட்சிகள் போஜ்புரி மொழி திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஆகான்ஷா துபே.

இவர், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் கடந்த மார்ச்.26 ம் தேதி மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

அகாங்க்‌ஷாவின் தற்கொலை அவரது ரசிகர்களையும் போஜ்புரி திரைப்பட உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில் நடிகை தற்கொலை செய்து கொண்ட ஹோட்டலிடமிருந்து புதிய சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு 1.30 மணியளவில் நடிகை அகாங்க்‌ஷாவுடன் நபர் ஒருவர் உடன் வருவதும் அகாங்க்‌ஷாவுடன் அவரது அறையில் சிறிது நேரம் செலவழித்த பின்னர் கருப்பு நிற எஸ்யுவி காரில் ஏறி செல்வதும் பதிவாகியுள்ளது.

நடிகையுடன் உடன் வரும் நபர் சந்தீப் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் இதுவரை சந்தீப் சிங்கை விசாரணைக்கு உட்படுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.அகாங்க்‌ஷாவுடன் சந்தீப் சிங் அவரது அறையில் சுமார் 17 நிமிடம் வரை உடனிருந்ததும் தெரிய வந்துள்ளது