“தமிழக மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ. 2 லட்சம் வழங்கும் மத்திய அரசு” யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Photo of author

By Rupa

மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிசி, எம்பிசி, டிஎன்சி வகுப்பினருக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறியுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அத்தோடு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“ஐஐடி, ஐஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(MBC) மற்றும் சீர் மரபினர் இன(DNC) தமிழக மாணவ மாணவிகள் 2024-25ம் ஆண்டுக்கான பிரஷ் மற்றும் ரினிவல் அப்ளிகேஷன்களை சமர்ப்பிக்கலாம்.

அத்தோடு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக அவர்கள் செலுத்திய கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களிலிருந்து ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கு
“http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship-schemes” – என்ற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரியில் இருந்து டவுன்லோட் செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சர்டிபிகேட்களுடன் தகுதியான விண்ணப்பங்களைப் பரிந்துரை செய்து, ரினிவல் அப்ளிகேஷன்களை டிசம்பர்-15 தேதிக்குள், நியூ அப்ளிகேஷன்களை ஜனவரி-15 தேதிக்குள் சென்னை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.