உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? இன்று நடை பெறும் வாக்கு எண்ணிக்கை!

0
137

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தை பொருத்தவரையில் அந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் மிகவும் சுலபமாக ஆட்சியை கைப்பற்றி விட முடியும்.

ஆகவே அந்த மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் முடிவுகள் இன்று வெளியாக இருக்கின்றன. இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்திற்கு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் மாதம் 7ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்தது. பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகிறது இரவுக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே உத்தரப் பிரதேசத்தை பாஜக தக்க வைக்குமா என்பது இன்றே தெரிய வந்துவிடும்.

வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு வெற்றி பெறுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. 75 மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் தெரியுது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. 75 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த மாநிலத்தில் 250 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இதைத்தவிர மாநில காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

36 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவல்துறையினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பிலும் 214 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவிலும், ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்திருக்கிறார் பதட்டமான பகுதிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும் இதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லும்போது நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று ஒரு அதிகாரி ஒப்புக்கொண்ட காணொளிக்காட்சி சமாஜ்வாதி கட்சியின் வலைதளப் பக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாரணாசிக்கு கொண்டு சென்ற லாரிகள் தடுக்கப்பட்டதாகும் வாக்குகளை திருட பாஜக முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய சூழ்நிலையில், இந்த வீடியோ காட்சி மேலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

அரசியல் கட்சிகள் புகார் கூறி வருவதால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கூடுதலாக 2 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அனுப்பியிருக்கிறது. அதனடிப்படையில், பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வாரணாசி தொகுதியிலும், டெல்லி மாநில தலைமை தேர்தல் அதிகாரி பானா தொகுதியிலும் கண்காணிப்பாளர்கள் என்று தெரிகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தை பொருத்தவரையில் 70 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கும் வாக்குபதிவு மிகவும் அமைதியாக நடைபெற்றது. சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக சொல்லப்படுகிறது.

ஆளும் தரப்பான பாஜகவிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடும் முழுவீச்சில் நடந்திருக்கிறது எண்ணிக்கை மையங்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து களமிறங்கினார். சிரோமணி அகாலிதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்திருக்கிறது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சி இந்த அணிகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கே அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. ஆனால் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்று சொல்லப்படுகிறது. காலை 8 மணி அளவில் 66 பகுதிகளில் உள்ள 117 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளைக் கொண்டுள்ள சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 28 மற்றும் மார்ச் மாதம் 5 தேதி என 2கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இங்கேயும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பிரன்சிங், சபாநாயகர் கேம்சந்த் முன்னாள் முதல்வர் இபோபி காங்கிரஸ் கட்சியை சார்ந்த உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது.

பாஜக ஆட்சி நடைபெறும் கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு கடந்த 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

முதல்முறையாக இங்கே பாஜக 40 இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் முதல் முறையாக இங்கே வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தன்னுடைய வேட்பாளர்களை பனாஜி அருகே சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleதென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?
Next articleஉக்ரைன் ரஷ்யா போர் விவகாரம்! தற்காலிகமாக ரஷ்யாவில் சேலைகளை நிறுத்திய வார்னர் மீடியா!