தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு! திமுகவா? அதிமுகவா? அல்லது புதிய கட்சியா?

0
154

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நேற்று நடைபெற்றது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் அதிமுகவை விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். முதல் கட்டமாக 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.

இந்நிலையில் தந்தி டிவி எப்பொழுதும் கருத்து கணிப்பு நடத்தி வரும் அது போல இந்த தேர்தலிலும் தேர்தல் முடிந்த பிறகு கருத்து கணிப்பு நடந்தது. அதை தொடர்ந்து, தொலைக்காட்சியில் வேலூரில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பானது. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுகவின் கதிர் ஆனந்த் 46 – 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 41 – 47 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தீபலட்சுமி 4 – 7 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முந்தைய கருத்து கணிப்பு படி திமுக 48-52 எனவும் அதிமுக 43-48 எனவும் தந்தி டிவி கூறியது. தேர்தல் வெற்றி யாருக்கு என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleசோயா பீன்ஸ் – இல் போதை பொருளா? மக்களே உஷார்!
Next articleஎதையும் நல்லா செய்யனும் அது தான் என் பாலிஸி! நித்யா மேனன் ஓப்பன் டாக்