யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்

Photo of author

By Anand

யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்

 

ஆளும் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அப்போது அவர் பேசியதாவது, இது என்ன ஜனநாயக நாடா? தாத்தா முதலமைச்சர்,மகன் முதலமைச்சர்,இப்போ பேரன் அமைச்சர் அடுத்து துணை முதலமைச்சர் அதுக்கு அப்புறம் என்ன நாடு என்ன ஆகுமோ?, தங்கச்சி எம்பி இப்படி ஒரு குடும்பமே நாட்டை சுரண்டி கொண்டுள்ளது. இதுக்கு தான் ஓட்டு போட்டோமா?

 

உதயநிதி இந்த நாட்டுக்காக அல்லது இந்த மக்களுக்காக என்ன பண்ணிட்டார். நம்மள விடுங்க திமுகவுக்கு என்ன பண்ணிட்டார்,போராட்டத்தில் கலந்து கொண்டாரா? சிறைக்கு சென்றாரா? யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்னாடி வரை நடிகைகள் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்த,நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை வரை சென்றவர் தான் இந்த உதயநிதி.

 

இன்னைக்கு இவர் தான் தமிழ் நாட்டின் அமைச்சர்.வெட்கக்கேடு இது தான் சுயமரியாதை இயக்கமா? திமுகவின் சுயமரியாதை உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுயமரியாதையை தூக்கி பிடிக்கும்  பொன்முடி, துரைமுருகன் போன்றோர் தற்போது உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை வரவேற்கிறேன் என்கிறார்கள். இப்போ எங்கே போனாங்க உங்க அண்ணா, பெரியார் லாம் என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.