கமல் விழாவில் அஜித் வராதது ஏன்? புதிய தகவல்
‘கமல்ஹாசன் 60’ என்று ஞாயிறு அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் அஜித்துக்கு என பிரத்யேக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் அவர் கண்டிப்பாக இந்த விழாவில் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம்போல் இந்த விழாவையும் புறக்கணித்துவிட்டார்.
இந்த விழாவில் அஜித் சென்னையில் இருந்து கொண்டே கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த மேடை, கமல்ஹாசனுக்கான பாராட்டு விழா மேடையாக இருந்தாலும் நிச்சயம் இந்த மேடையில் அரசியல் பேசப்படும் என்றும், ஏற்கனவே இதேபோன்ற ஒரு மேடையில் அஜித் பேசியது பெரும் விளைவுகளை ஏற்படுத்தியிருந்ததால் அதேபோன்ற ஒரு சூழ்நிலையை மீண்டும் வலிய சென்று வரவழைத்து கொள்ள வேண்டாம் என்று அஜித் கருதியதாலும் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனிடம் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அஜித் வாழ்த்து கூறியதாகவும், தன்னால் இந்த விழாவிற்கு வர இயலாது என்பதை அவர் விளக்கியதாகவும் கூறப்படுகிறது
அஜித் எதிர்பார்த்த மாதிரியே கமல்ஹாசன் 60 என்ற இந்த விழாவில் கமல்ஹாசன் புகழைவிட, அதிகம் பேசப்பட்டது அரசியல் தான் என்பதும், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து ரஜினிகாந்த் பேசிய கருத்தும், ரஜினி-கமல் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ.சி கூறிய கருத்தும் இன்றளவும் விவாதப்பொருளாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது