அதிமுகவை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய நூலகமாக இருக்கிறது சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நூலகம். அண்ணாவின் 102வது பிறந்த நேரத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் இந்த நூலகம் திறந்துவைக்கப்பட்டது.
அந்த நூலகத்தில் அண்ணா என்கின்ற பெயர் பலகையில் அ”  என்ற எழுத்து தவறி விழுந்து விட்டது, அது சரிசெய்யப்படாமல் இருந்து வருகின்றது.
இது குறித்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அண்ணா திமுகவை திமுக ஆக்கிவிட்டார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆர்எஸ்எஸ் களமாக்கி இருக்கிறார்கள். இந்த சமயத்தில், கலைஞர் கொடுத்த அண்ணா நூலகத்தில் அண்ணாவின் பெயரையே தவற விட்டுவிட்டார்கள். அண்ணா நூலகத்தை அவர்கள் முறையாக  பராமரிக்காமல் இருந்தால், திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றார், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.