என்ன இந்த காரணத்துக்காகவா திருமணம் செய்யாமல் விட்டீங்க? ரசிகர்கள் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

என்ன இந்த காரணத்துக்காகவா திருமணம் செய்யாமல் விட்டீங்க? ரசிகர்கள் அதிர்ச்சி!

Parthipan K

மூத்த நடிகை சச்சு தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை  வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்சினிமாவில் திருமணமே செய்து கொள்ளாமல் சில நடிகைகள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான்  தமிழ் சினிமாவின் மூத்தநடிகை சச்சு.இவர் ராணி என்ற படத்தில் தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்கள் வரை நடித்து இருக்கிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருக்கிறார். பிறகு ஹீரோயினாக  நடிப்பதா குழந்தை நட்சத்திரமாக  நடிப்பதா என்ற குழப்பத்தில் சினிமாவில் கேப் விட்டார்.

சில படங்களில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுக்கு தங்கையாக நடித்தார் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ‘அன்னை’.இந்த படத்தை கிருஷ்ணர் பஞ்சு என்ற இயக்குனர் இயக்கினார். ஏவிஎம்மில் மாத சம்பளத்திற்கு வேலையில் சேர்ந்தார். சிறுவயதிலிருந்தே சச்சுவை பார்த்து வருவதால் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி உள்பட அப்போதைய ஹீரோக்கள் அவருடன் சேர்ந்து நடிக்க  தங்கினார்கள். 

பிறகுதான் சச்சு ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை புதுமுகங்களுடன் சேர்ந்து ஸ்ரீதர் இயக்க அதில் நாகேஷுக்கு ஜோடியாக ஹீரோயின் வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இருந்துதான் இவர் காமெடிக்கு சற்று நகர்ந்தார் என்றே கூறலாம். பிறகு இவர் காமெடியில் ஒரு கலக்கு கலக்கி நிறைய வாய்ப்புகளை பெற்றார். நாகேஷ், தங்கவேல், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என அப்போதைய முன்னணி காமெடி நடிகருடன் நடித்தார். 50 படங்களுக்கு மேல் நாகேஷ் உடன் நடித்தார். பழைய ஹீரோயின்கள் சினிமாவை விட்டு சென்று விட்ட போதும் இவர் இன்னமும் நாடகங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.இவர் கடைசிவரை ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு சொன்ன பதில் ‘என் கூட பிறந்தவர்கள் நிறைய பேரு அவர்களோட வாரிசுகள் அதிகம் சிலர் நல்லா இருக்காங்க எல்லாரையும் நல்ல நிலைக்கு கொண்டு வரனும்னு நினைச்சேன் அதனால கல்யாணமே பண்ணிக்கல’ என்று பதிலளித்துள்ளார்.