எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. நேற்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.
மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார்.
பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை. அதோடு, அவர்களுக்கு சிறுபான்மையுனர் ஓட்டும் கிடைக்காது. எனவே பாஜகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவை பலவீனமாக்கும். இது பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். ஆனால், திமுக மற்றும் அக்கட்சியுன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கழகம் போன்றவைகள் போட்டி போட்டு எதிர்ப்பு தெரித்து அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
இவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி பலவீனமானால் இவர்களுக்கு என்ன வந்தது? இவர்கள் ஏன் இப்படி துடிக்கிறார்கள்? அதிமுக மீது இவ்வளவு அக்கறை இருப்பவர்கள் அக்கட்சியோடு கூட்டணி வைத்து அதை பலப்படுத்தியிருக்க வேண்டாமா? பிறகு எதற்காக இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என யோசித்தால் ஒன்று புரியும்.
இவர்கள் அத்தனை பேரின் வேதனை என்னவென்றால், அதிமுக-பிஜேபி கூட்டணி அமையாமல் இருந்தால் அதிமுகவை கை காட்டி, திமுகவை மிரட்டி கூடுதல் இடங்களை பெற்றிருப்பார்கள். இப்போது, திமுக கொடுகும் இடங்களை பெற்றுக்கொண்டு 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும். அதுதான் உங்கள் அத்தனை பேரின் கோபமும்’ என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.