மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு அவருக்கு என்ன வேலை!! இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்!!
ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் என்று பொருளாகும். இந்தியாவில் ஆளுநர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மேலும் அவர்களின் அதிகாரம், செயல்பாடுகள் மற்றும் அவர் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.
ஒரு கவர்னர் ஒரு பொது நபராக தெரியலாம். ஆனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் அவர்கள் தலைவராகவும் நியமிக்கப் படுகிறார்கள். கவர்னர் என்ற சொல் கூட்டாட்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர். அரசியல் அமைப்பால் குறிப்பிட்ட ஆளுநர் அதிகாரம் பெரிதும் மாறுபடுகிறது.
ஆளுநருக்கு தேவையான தகுதி
வேட்பாளர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
மேலும் வேறு எந்த பதிவிலும் ஈடுபடக்கூடாது.
அவர் யூனியன் அல்லது வேறு மாநிலத்தின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் இருக்கக் கூடாது. ஆனால் ஆளுநராக இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் ஆளுனராக பதவியில் இருப்பவர் எந்த ஒரு கிரிமினல் கேஸ் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். குடியரசு தலைவர் தான் ஆளுநருக்கு பரிந்துரை செய்வார்கள். மேலும் ஒரு ஆளுநர் இரண்டு மாநிலங்களிலும் ஆளுநராக இருக்க முடியும். மேலும் தொடர்ந்து ஒரே மாநிலத்தில் இரண்டு முறையும் ஆளுநராகவும் இருக்க முடியும். ஆனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரே ஆளுநராக இருக்க முடியாது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆளுநராக இருக்க முடியும்.
ஆளுநர் மீது உடனடியாக கிரிமினல் கேஸ் போட முடியாது அவரை கைது செய்ய வேண்டும் என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அதற்கான ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். அவரை எப்போதும் கைது செய்ய முடியாது.
ஆளுநரின் வேலை
எம்எல்ஏ மற்றும் எம்பி க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது, டிஎன்பிசி உறுப்பினர்களை நியமனம் செய்வது, சட்டமன்றத்தில் ஆண்டு நிதி நிலைமையை அறிக்கை, நிதி நெருக்கடி பற்றி சட்டசபையில் எடுத்துரைப்பது. மேலும் தலைமை நீதிபதியை நியமனம் செய்வது போன்றவை ஆளுநரின் வேலைகள் ஆகும்.
சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் ஒப்புக் கொண்டால் மட்டுமே அந்த மசோதா வெளிவரும் ஆளுநரால் அந்த மசோதாவை ரத்து செய்யவும் முடியும். மேலும் அந்த மசோதாவை பற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதும் ஆளுநரின் வேலையாகும். ஆளுநர் அந்த மாநிலத்தின் சட்டசபையை கலைப்பதற்கும் உரிமை உண்டு.
ஆளுநரின் சம்பளம் மாதத்திற்கு மூன்று லட்சம் ஆகும். ஒரு ஆண்டிற்கு 42 லட்சம் இதனை அந்த மாநில அரசே வழங்கப்பட வேண்டும். ஆனால் முதல்வர் மாநிலத்தில் திட்டங்களை செயல்படுத்தும் உரிமை உண்டு. ஆனால் ஆளுநருக்கு பரிந்துரைக்கும் உரிமை மட்டுமே உண்டு. ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருப்பவர்கள் ஆவார்.