இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!

Photo of author

By Hasini

இதற்கெல்லாம் ஏன் நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார்! கேள்விகளால் விளாசிய ராகுல்!

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. தொடர்ந்து பணவீக்கம் பெட்ரோல் டீசல் விலைகள் ஏறிக் கொண்டே செல்வது, விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் போன்றவை பற்றி எல்லாம் பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்.  உண்மையான விமர்சனங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய கேள்விகள் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பிரதமரிடம் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். உண்மையான விமர்சனங்கள் போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த பிரச்சினைகளில் கிழக்கு பகுதியில் சீனா பெரிய அளவிலான ராணுவ கட்டமைப்பை செய்திருப்பதாக ராணுவ தளபதி எம்.எம் மரவானே கூறியதை மேற்கோள் காட்டி அப்போது இந்திய மண்ணில் சீனர்கள் தங்கப் போகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

பிரதமர் அங்கு லடாக் வரை சென்றபோது கூட உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என்ற குற்றசாட்டும் தற்போது முன் வைக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவருக்கு தெரியவில்லையா? நாம் உணவு சாப்பிடும் போது பொது மக்களாகிய நாம் தவறாமல் விவசாயிகளை நினைக்க வேண்டும்.